நுவன் சொய்சா வேகப்பந்து பயிற்சியாளராக நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவன் சொய்சா, இலங்கை கிரிக்கெட்  அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக கடமையேற்கவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
 
இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ள நுவன் சொய்சா, இதற்கு முன்னர் இந்தியாவின் கோவா கிரிக்கெட் சபை, இலங்கையின் ரோயல் கல்லூரி மற்றும் NCC கழகம் ஆகியவற்றில் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...