ஹேராம் ரீமேக் உரிமை ஷாருக்கான் வசம்

கமலின் பல சிறந்த திரைப்படங்களில் ஒன்றான ஹேராம் ரீமேக் செய்யும் உரிமையை ஷாருக்கான் பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2000மாம் ஆண்டு வௌியான ஹேராம் திரைப்படத்தை 18 வருடங்களின் பின்னர் ரீமேக் உரிமையை ஷாருக்கான் பெற்றுள்ளார்.

கமல்ஹாசன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதல் குல்கர்னி, நஷ்ருதீன் ஷா, சௌரப் சுக்லா பல ஹிந்தி நடிகர்களில் நடிப்பில் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஹேராம் வெளியானது. விமர்சனரீதியாக பெறுவெற்றியை பெற்றாலும் சாதாரண ரசிகர்களுக்கு வழமைபோல புரியவில்லை என்று குற்றச்சாட்டையும் சந்தித்தது.

ஹேராம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஷாருக்கானுக்கு ஒரு கைக்கடிகாரத்தையே கமல் வழங்கியுள்ளார். தன்னிடம் சம்பளம் வழங்குவதற்கு பணம் இருக்கவிலலை என்றும் தெரிவித்திருந்தார். எனினும் திரைப்படம் பற்றிய நல்ல நினைவுகள் ஷாருக்கிடம் இருக்கும் என்கிறார் கமல்.

ஹேராம் ரீமேக் குறித்த தகவல்களை ஷாருக்கான் விரைவில் வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...