மக்களுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதால் நிலப்பிரபுத்துவத்தை நோக்கி நாடு நகரும் அபாயம்

அரசியல் என்பது தமது உரிமை என்பதை மறந்து, அரசியல் வாதிகளுக்கு மாத்திரமான உரிமை என மக்கள் சிந்திக்கும் நிலப்பிரபுத்துவக் காலத்தை நோக்கி நாடு பயணித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவ்வாறான நிலப்பிரபுத்துவத்தை நோக்கி நாடு செல்லும்போது ஊழல், மோசடிகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தலைவிரித் தாடுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் தமது சுதந்திரத்தை இழந்துள்ளனர். இதனால் சமூகத்தின் அடித்தளம் அதிர்ந்துள்ளது. ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாகக் கிடைத்த பலன்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு சில பிற்போக்கு சக்திகள் கடுமையாக முயற்சித்ததை 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் காணக்கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் நேற்றையதினம் சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துகொண்டன. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைச்சாத்திடப் பட்டது.

இதில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். நல்லாட்சியை உறுதிப்படுத்து வதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து முன்னணியொன்றை ஏற்ப டுத்துவது தொடர்பில் தமது கட்சி பேச்சுக்களை நடத்தி வந்ததாகவும் குறிப் பிட்டார். சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணங்கிக் கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற் படுவேன் என்றும் பிரதமர் தனது உரையின் போது தெரிவித்தார்.

“இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் போட்டித்தன்மை நிறைந்த பொருளாதாரத்தை நாம் உறுதிப் படுத்து வோம்” என்று குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகம் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பல்வேறு கருத்துக்களை உடைய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் ஒன்றி ணைந்திருப்பதாகவும் கூறினார். “மக்களுக்கு நிவாரணத்தை வழங்கக் கூடியவகையில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவே நாம் விரும்புகிறோம்” என்றார். 


Add new comment

Or log in with...