ஶ்ரீ.ல.சு.க. மத்திய குழுவுக்கு தடையுத்தரவு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (15) தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன் அனுமதியின்றி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பில் அக்கட்சியின் செயற்குழுவுக்கு மீண்டும் கூடுவது தொடர்பிலேயே இத்தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் தலைவரான ஐ.ம.சு.மு உறுப்பினர் பிரசன்ன சோளங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (15) கூடவிருந்த ஶ்ரீ.ல.சு.க. மத்திய குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்படுகிறது.

முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஶ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாபாவிற்கு தனது முன் அனுமதியின்றி மத்திய குழுவை கூட்ட வேண்டாம் என எழுத்து மூலமான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறிப்பிட்ட அக்கடிதத்தின் பிரதியும் இவ்வழக்கில் சோளங்காரச்சியினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...