இலங்கையில் மலேரியா இல்லை; WHO சான்றிதழ் | தினகரன்

இலங்கையில் மலேரியா இல்லை; WHO சான்றிதழ்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இலங்கை, மலேரியாவிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட நாடாக உலக சுகாதார சங்கம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பெண் அனோபிளஸ் (Anopheles) நுளம்பின் மூலம் பரவலடையும் இந்நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 1 - 3 மில்லியன் மக்கள் இந்நோயினால் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் 90% ஆனோர் ஆப்பிரிக்காவின் உப சஹாராவிலுள்ள குழந்தைகளாக காணப்படுகின்றனர்.

குறித் நோயின் அறிகுறிகள்: 
இரத்த சோகை, தலை லேசாக இருப்பது போன்று உணருதல், சுவாசித்தலில் சிரமம், மிகையான இதயத் துடிப்பு போன்றவை காணப்படுகின்றன.

இதன் பொரு அறிகுறிகளாவன:

காய்ச்சல், கடுமையான குளிர், குமட்டல்.

இந்நோயின் தீவிரம் காரணமாக ஆழ்மயக்கம் (கோமா) ஏற்படுவதோடு, இது மரணம் வரை செல்லும்.

 


Add new comment

Or log in with...