பிரதேச நல்லிணக்கக் குழுக்களின் இன நல்லுறவு விஜயம்

GCERF நிதி உதவியுடன் HELVETAS நிறுவனத்தின் அனுசரணையுடன் சமாதானம் மற்றும் சமூகப்பணியும் (PCA) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் Y-CHANGE திட்டத்தின் நடவடிக்கையாக சமூக முன்னெடுப்பு (Community Initiative) நேற்று (15) பொத்துவில், லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெற்றது.

இதில் அட்டாளைச்சேனை, ஆலையடி வேம்பு, பொத்துவில், லாகுகல பிரதேச நல்லிணக்க இளைஞர் குழு உறுப்பினர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பிரதேச நல்லிணக்கக் குழுக்களால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில் பாடசாலை மாணவர்களுக்கு, இளைஞர் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சமூக சார் அமைப்புகளுக்கு அனுபவப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டு இறுதியாக கலாசார நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

Y-CHANGE திட்டத்தின் திட்ட இணைப்பாளர் I. சுதாவாசன் , திட்டஉத்தியோகத்தர் K.T. ரோகினி, சுரேகா அத்தநாயக, சமாதான தொண்டர்களான திலக்‌ஷி, சாளினி, இஷ்ரத் அலி, ஹசினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லிணக்கத்திற்கான சமூக முன்னெடுப்பு நடவடிக்கையின் மூலம் இளைஞர்களின் தலைமைத்துவம், தீர்மானிக்கும் திறன்அதிகரிக்கப்பட்டு அதிதீவிரவாதத் தன்மைக்கு எதிராக அவர்களை வலுவூட்டுவதற்கான செயற்பாடாகவே இந்நவடக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏ. மொஹமட் பாயிஸ்


Add new comment

Or log in with...