அவன் கார்ட் வழக்கிலிருந்து நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்டோர் விடுதலை

அவன் கார்ட் வழக்கிலிருந்து நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்டோர் விடுதலை-Nissanka Senadhipathi & 7 other suspects acquits over the Avant Garde floating armoury case

'அவன் கார்ட்' மிதக்கும் ஆயுதக் கிடங்குடனான கப்பல் தொடர்பான வழக்கிலிருந்து, அவன்கார்ட் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பில் கடந்த 2019 ஒக்டோபர் 16ஆம் திகதி அவன் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டு நாடு திரும்பியபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில், முன்வைக்கப்பட்ட 7,573 குற்றச்சாட்டுகளில் 19 குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவ்வழக்கைத் தொடர முடியும் எனத் தெரிவித்து, அவ்வழக்கின் பிரதிவாதிகளாக தெரிவிக்கப்பட்டிருந்த அனைவரையும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் பிணையில் விடுவித்திருந்தது.

ரக்னா லங்கா நிறுவனம், அவன்கார்ட் மெரிடைம் சர்விசஸ், முன்னாள் ரக்னா லங்கா தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். தமயந்தி ஜயரத்ன ஆகிய பிரதிவாதிகளே இவ்வாறு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


Add new comment

Or log in with...