பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரி லத்தீப் ஓய்வு

பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்றுடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இவர் ஓய்வு பெற இருந்த போதும் இவருக்கு ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றி கீர்த்தி மிக்க அதிகாரியான லத்தீப்,  அரச புலனாய்வு சேவையிலும் அதனுடன் தொடர்புள்ள பல பிரிவுகளில் முக்கிய பதவிகள் வகித்ததோடு யுத்த காலத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பணிப்பாளராகவும் சேவையாற்றினார்.  

பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட இவர்,  உள்நாட்டு வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகள் என்பவற்றை முறியடிக்க பெரும் பங்காற்றியிருந்தார். நாட்டிற்கு செய்த மட்டில்லா சேவைக்காக இவருக்கு பொலிஸ் வீரதா பதக்கம்,  பூர்ணபூமி பதக்கம்,விசேட சேவை பதக்கம் உட்பட பல பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இறுதியாக அவர் நேற்று கலந்து கொண்டதோடு தான் நேற்றுடன் ஓய்வு பெறுவதாக அவர் இதன் போது பலரிடமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.(பா)    


Add new comment

Or log in with...