யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ் ட்ரவல் டீல்களுடன் உலகை அனுபவியுங்கள் | தினகரன்


யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ் ட்ரவல் டீல்களுடன் உலகை அனுபவியுங்கள்

யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ் ட்ரவல் டீல்களுடன் உலகை அனுபவியுங்கள்-Union Lifestyle Bonus

உலகளாவிய ரீதியில் பிரயாணம் செய்வது என்பது பலரின் கனவாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் “யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ்| திட்டத்தினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு தமக்கு விரும்பிய கனவு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது பல்வேறு பிரயாண விலைக்கழிவுகளை கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் மேற்கொள்ளும் பிரயாணம் என்பது மனம் மறவாத அனுபவங்களை பெற்றுக் கொள்வதாகும். யூனியன் லைஃவ் ஸ்டைல் போனஸ் ஊடாக உள்நாட்டு சுற்றுலாக்களுக்கு சகாயமான அங்கமாக சினமன் எயார் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்வதற்கு 20% விலைக்கழிவு வழங்கப்படுகின்றது.

மேலும், எயார் ஏசியா ஊடாக மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சர்வதேச விடுமுறையை களிக்க, விமான மற்றும் ஹோட்டல் பக்கேஜ்களை 10% விலைக்கழிவுடன் வழங்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்கள் தற்போது தமது மற்றும் தமது குடும்பத்தாரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமையை உணர்ந்து வெளிநாட்டு பிரயாணங்களை மகிழ்ச்சிகரமாக முன்னெடுக்க முடியும். யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் காப்புறுதி தீர்வினூடாக அவர்கள் அனுகூலம் பெறுவது மாத்திரமன்றி, பிரத்தியேகமான அனுபவங்களினூடாக தமது வாழ்க்கை முறையையும் மேம்படுத்திட முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் “உங்கள் வாழ்க்கையை இன்றே அனுபவியுங்கள், நிறுவனம் உங்கள் எதிர்காலத்தை கவனித்துக் கொள்ளும்” எனும் உறுதி மொழியின் பிரகாரம், இந்த திட்டத்தினூடாக காப்புறுதிதாரர்களுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள் வழங்கப்படுவதுடன், 2020 ஆம் ஆண்டை முழுமையாக அனுபவிப்பதற்கு உதவிகள் வழங்கப்படும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி திட்டமொன்றுக்கு வாடிக்கையாளர்கள் 2020 மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னதாக தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாதாந்தம் 15000 ரூபாய்க்கு மேற்பட்ட தவணைக் கட்டணத்தைக் கொண்ட எந்தவொரு யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதித் திட்டத்துக்கும் இது பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்குநர்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. மூன்று தசாப்த கால அனுபவத்துடனும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பாரம்பரியம் மற்றும் வலிமையுடனும் செயலாற்றுகின்றது. நிறுவனத்தின் உறுதியான, சுறுசுறுப்பான மற்றும் சேவை நோக்குடைய நிபுணர்களினூடாக, வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான காப்புறுதி தீர்வுகளையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு இலக்கம்: 0112 990009 ஊடாக தொடர்பு கொள்ளவும்.


Add new comment

Or log in with...