இரு இ. அமைச்சர்கள், இரு எம்.பி.கள்தொடர்பில் 18இல் முடிவு | தினகரன்


இரு இ. அமைச்சர்கள், இரு எம்.பி.கள்தொடர்பில் 18இல் முடிவு

இராஜாங்க அமைச்சர்களான எஸ்.பி திசாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் விசாரணைக்குழு,  எதிர்வரும் 18ம் திகதி கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதுடன் எதிர்வரும் பதினெட்டாம் திகதி அந்த குழு மீள கூடிய பின் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம்  கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தபோதே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார். (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...