இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 100 வயது ஆமைக்கு ஓய்வு

அமெரிக்காவில் நீண்ட இனப்பெருக்கத்திற்கு பின் 100 வயது கொண்ட ஆமை ஒன்று அதன் இருப்பிடத்திற்கே திருப்பி அனுப்பப்படவுள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் உள்ள கலபகோஸ் தீவு ஆமைகள் உலகிலேயே அதிக நாட்கள் வாழும் உயிரினம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரைமுறையற்ற வேட்டையின் காரணமாக இந்த வகை ஆமைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன. இந்நிலையில் இனப்பெருக்கத் திட்டத்திற்காக சன்டா குரூஸ் தீவுகளுக்கு அனுப்பப் பட்ட 14 ஆண் ஆமைகளில் டீகோ என்ற இந்த ஆமையும் ஒன்றாகும்.

1960களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் 2,000க்கும் அதிகமான இராட்சத ஆமைகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன. டியாகோ இனப்பெருக்கத்தின் மூலம் சுமார் 800க்கும் அதிகமான ஆமைகளை பிரசவித்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் முடிவுற்ற நிலையில் டீகோ வரும் மார்ச் மாதம் கலபகோஸ் தீவுக்கு திருப்பி அனுப்பப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...