புத்தளத்தில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் திட்டம் | தினகரன்


புத்தளத்தில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் திட்டம்

வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி ரயில்வேகடவைக்கு அருகில் உள்ள சிறிய கட்டடமொன்றின் சுவரில் புத்தளம் தம்பபண்ணி வரலாற்றைக்குறிக்கும்  ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது. 

புத்தளம்,தில்லையடிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 

புத்தளம்பிரதேசத்தில் தம்பபண்ணி எனும் இடத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாற்றை பிரதிபலிக்கின்ற வகையில் குறித்த படம் வரையப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு வரையப்பட்டகுறித்த ஓவியம்  செவ்வாயக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

இதன்போது, இன மத வேறுபாடின்றி மூவருக்கு சிகை வெட்டி, முகச் சவரம் செய்து புத்தாடைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 

இதேவேளை,புத்தளம், மதுரங்குளி உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறுவெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் 

 


Add new comment

Or log in with...