சிரியாவில் தொடர்ந்து 600 அமெரிக்க துருப்புகள் நிறுத்தம் | தினகரன்


சிரியாவில் தொடர்ந்து 600 அமெரிக்க துருப்புகள் நிறுத்தம்

சிரியாவில் சுமார் 600 அமெரிக்க துருப்புகள் நிலைநிறுத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். சிரியாவில் அமெரிக்காவின் தலையீடு முடித்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“வடகிழக்கு சிரியாவில் இருந்து நாம் தொடர்ந்து துருப்புகளை வெளியேற்றி வருகிறோம்” என்று தனது ஆசிய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து தென் கொரியாவுக்கு பயணிக்கும் முன்னர் எஸ்பர் குறிப்பிட்டார்.

“இதன் முடிவில் சுமார் 500 தொடக்கம் 600 வரையான துருப்புகளை தக்கவைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார். சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேறும் அறிப்பொன்றை டிரம்ப் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார்.

இது அமெரிக்க கூட்டாளியான குர்திஷ் போராளிகளுக்கு எதிரான துருக்கி இராணுவ நடவடிக்கைக்கு சாதகமாக அமைந்தது. எனினும் பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் நிலைகளை பாதுகாக்க அமெரிக்க துருப்புகள் நிலைநிறுத்தப்படும் என்று டிரம்ப் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...