திருக்கேதீஸ்வர ஆலயம், மன்னார் ஆயர் இல்லத்திற்கு சஜித் பிரேமதாஸ விஜயம் | தினகரன்


திருக்கேதீஸ்வர ஆலயம், மன்னார் ஆயர் இல்லத்திற்கு சஜித் பிரேமதாஸ விஜயம்

திருக்கேதீஸ்வர ஆலயம், மன்னார் ஆயத்திற்கு சஜித் பிரேமதாஸ விஜயம்-Sajith Visit Thiruketheeswaram-Mannar

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே  இந்த விஜயம் அமைந்தது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாஸ குழுவினர்  மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து பேசினார்.

திருக்கேதீஸ்வர ஆலயம், மன்னார் ஆயத்திற்கு சஜித் பிரேமதாஸ விஜயம்-Sajith Visit Thiruketheeswaram-Mannar

சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சஜித் பிரேமதாஸவுக்கு மன்னார் ஆயர், ஆசி வழங்கினார்.

திருக்கேதீஸ்வர ஆலயம், மன்னார் ஆயத்திற்கு சஜித் பிரேமதாஸ விஜயம்-Sajith Visit Thiruketheeswaram-Mannar

இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்த  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் ஆலயத்தின் அறங்காவலர்கள் மற்றும் ஆலய குருக்களை சந்தித்தனர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய ஆலய கட்டட நிர்மாணப்பணிகளையும்  இவர்கள் பார்வையிட்டனர். அறங்காவலர்கள் ஆலய கட்டடப் பணி குறித்த தேவைகளை ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாஸவிடம் எடுத்துரைத்தனர்.


Add new comment

Or log in with...