ஒரே நேரத்தில் பல இலக்குகளைச் சமாளிக்கும் Nova 5T

புத்தாக்கத்துடன் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனமான Huawei, இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது உயர்ரக ஸ்மார்ட்போன் உற்பத்தியான Huawei Nova 5T இனை நம்பமுடியாத விலையில் அறிமுகப்படுத்தி வைத்திருந்தது. இலங்கையில் உள்ள விசுவாசம்மிக்க Huawei பாவனையாளர் மத்தியில் அறிமுகமான உடனேயே மிகுந்த பிரபலமடைந்துள்ளதுடன், நம்பமுடியாத விலையில் கிடைக்கப்பெறுகின்ற ஈடுஇணையற்ற தொழில்நுட்ப சிறப்பம்சங்களே இதற்கான பிரதான காரணம்.

பாவனையாளர்கள் எவ்விதமான தாமதங்களுமின்றி apps களை செளகரியமாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் அதன் RAM கொள்ளளவு உள்ளமை Huawei Nova 5T இன் பிரதான கவர்ச்சி அம்சங்களில் ஒன்றாகும். அதிவேகமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள எடை குறைவான முதலாவது பிரதான ஸ்மார்ட்போனாக Huawei Nova 5T தலைநிமிர்ந்து நிற்கின்றது.

அதன் புதிய GPU Turbo காரணமாக விளையாட்டுப்பிரியர்களை இது பிரதானமாக ஈர்ப்பதுடன், தொழில்சார்ரீதியான மொபைல் விளையாட்டில் ஈடுபடுகின்றவர்களுக்கு மிகவும் கட்டுபடியாகும் தொலைபேசியாக Huawei Nova 5T காணப்படுகின்றது. EMUI 9.1 உடன் Nova 4 இனை விடவும் 59% அதிக வேகத்துடன் app பயன்பாட்டு தொடக்கம் காணப்படுவதுடன், சீரான UI தொழிற்பாட்டையும் 57% ஆல் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் GPU Turbo 3.0 ஆனது எவ்விதமான தாமதமுன்றி மெய்நிகர் விளையாட்டில் ஈடுபடுவதற்கு பாவனையாளர்களுக்கு இடமளிக்கின்றது.

GPU Turbo ஆனது CPU மற்றும் GPU processor செயல்திறனை மகத்தான அளவில் அதிகரிக்கச் செய்வதுடன், மேம்பட்ட கணிப்பீட்டுச் செயல்திறனுடன் EMUI அனுபவத்தை உச்சமயமாக்குகின்றது.

8GB RAM மற்றும் 128GB ROM உடனான Nova 5T இன் வடிவமைப்பானது கடுமையான பணிச்சுமைகளை நுண்ணறிவுடன் உச்சப்படுத்தக்கூடிய தீர்வின் அதிநவீன நடைமுறையாக உள்ளதுடன், மின்வலுவின் நுகர்வினைக் குறைக்கும் அதேசமயம் தேவைகளைப் பொறுத்து செயல்திறனை மேம்படுத்தும் சாதனத்தை வழங்குகின்றது.

 


Add new comment

Or log in with...