இன்ஸ்டாகிராமுக்கு கொள்கை வகுக்க டென்மார்க் முடிவு | தினகரன்


இன்ஸ்டாகிராமுக்கு கொள்கை வகுக்க டென்மார்க் முடிவு

இன்ஸ்டாகிராம் நட்சத்திரம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலம் லார்சனை 3,36,000 பேர் பின் தொடர்கிறார்கள். அவர் தமது தற்கொலை கடிதத்தை தம் இன்ஸ்டா கணக்கில் பகிர்ந்து இருந்தார். அதற்கு 30 ஆயிரம் பேர் விருப்பக் குறி இட்டிருந்தார்கள்.

8 ஆயிரம் பேர் பின்னுௗட்டம் செய்திருந்தார்கள். இது டென்மார்க்கில் விவாதமானதை தொடர்ந்து, இவரைப் போன்ற சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அந்நாட்டு அமைச்சர், ஊடகங்களுக்கு எத்தகைய பொறுப்பு உள்ளதோ அத்தகைய பொறுப்பு சமூக ஊடகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கும் உள்ளது. அதனை உணர்ந்து அவர்கள் கருத்துகளை பகிர வேண்டுமென கூறியுள்ளார்.

லார்சன் பகிர்ந்த தற்கொலை கடிதத்தை இன்ஸ்டாவிலிருந்து நீக்க இரு தினங்கள் ஆகியுள்ளது. அவர் குணமாகி வருவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


Add new comment

Or log in with...