Friday, April 26, 2024
Home » துறைமுக அதிகார சபை, விமான நிலைய வருமானங்களை அதிகரிக்க திட்டம்

துறைமுக அதிகார சபை, விமான நிலைய வருமானங்களை அதிகரிக்க திட்டம்

புத்தாண்டிலிருந்து செயற்பாடுகள்

by damith
January 1, 2024 7:20 am 0 comment

பிறந்துள்ள புத்தாண்டில் (2024) துறைமுக வருமானத்தை நூறு பில்லியன் ரூபாவாகவும், விமான நிலைய வருமானத்தை அறுபது பில்லியன் ரூபாவாகவும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான அமைச்சின் அபிவிருத்திப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கும் கலந்துரையாடலி லே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி தெரிவித்த அமைச்சர்: நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இரண்டு நிறுவனங்களான இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் விமான நிலையம் என்பன உள்ளன.பிறந்துள்ள புத்தாண்டில் துறைமுக அதிகார சபையின் வருமானத்தை 100 பில்லியன் ரூபாவாகவும் விமான நிலையத்தின் வருமானத்தை 60 பில்லியன் ரூபாவாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2023ஆம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகாரசபை 70 பில்லியன் ரூபாவையும், விமான நிலையம் 47 பில்லியன் ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டில் இவ்விரு நிறுவனங்களின் வருமானத்தை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதே தமது இலக்கு.

இதன்படி, துறைமுகத்தின் கொள்கலன் இயக்கத் திறனை அதிகரிக்க ஜூன் மாதம் கிழக்கு முனைய செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 08 புதிய விமான சேவைகள் வரவுள்ளன.இதனால் , தற்போதுள்ள முனையத்தில் பயணிகளின் சன நெரிசலை குறைக்கும் வகையில் 08 பில்லியன் ரூபா செலவில் முனையம் நவீனமயப்படுத்தப்படும் எனவும் துறைமுகங்கள்,கப்பல்போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT