சிவனொளிபாத மலை ஏறும் வழியில் மும்மொழியிலான வழிகாட்டல் கல் | தினகரன்

சிவனொளிபாத மலை ஏறும் வழியில் மும்மொழியிலான வழிகாட்டல் கல்

சிவனொளிபாதமலை- ஹற்றன் வழி நல்ல தண்ணிபாலத்தின் மேற்பகுதியில்,மலையின் அடிவாரத்தில் மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்ட கல்லொன்று நடப்பட்டுள்ளது. 

சிங்கள மொழியில் 'சிரிபாதஸ்தானய' என்றும், தமிழ் மொழியில் 'சிவனொலிபாதமலை' என்றும்,ஆங்கில மொழியில் 'சிரிபாதய'என்றும்,பெயர்கள் பொறிக்கப்பட்ட இக்கல்லை மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி, மக்களின் வசதி கருதி நட்டி வைத்தார். மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க சிவனொளிபாதமலை ஏறும் அடிவாரத்தில் இக்கல் நாட்டப்பட்டது.  

மேலும் அதன் மறுபரம் சிங்கள மொழியில் 'கௌத்தமசிரிபாதஸ்தானய'எனவும்,தமிழ் மொழியில் 'கௌரவ புத்த பகவானின் பாதம்' எனவும்,பாரியகல் ஒன்றுபொறிக்கப்பட்டு, 2017மார்ச் மாத காலப்பகுதியில் நாட்டப்பட்டது.  

சரித்திரத்தில் தமிழ் மொழியில், இம்மலையானது'சிவனொளிபாதமலை'என கூறப்பட்டு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.  

(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...