Friday, April 26, 2024
Home » ஜனவரியில் பிரித்தானிய இளவரசி இலங்கை விஜயம்

ஜனவரியில் பிரித்தானிய இளவரசி இலங்கை விஜயம்

- 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு வருகை

by Prashahini
December 15, 2023 8:19 am 0 comment

பிரித்தானிய இளவரசி அன்னே (Anne, Princess Royal) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், 13 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளவரசி அன்னேவுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லோரன்ஸூம் (Vice Admiral Sir Timothy James Hamilton Laurence) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT