Friday, April 26, 2024
Home » யொஹானிக்கு வீடு, அகிலத்திருநாயகிக்கு? சாணக்கியன் கேள்வி

யொஹானிக்கு வீடு, அகிலத்திருநாயகிக்கு? சாணக்கியன் கேள்வி

- திறமையுடையவர்களுக்கு உதவுமாறும் கோரிக்கை

by Prashahini
December 6, 2023 1:04 pm 0 comment

நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற பாராளுமன்ற விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தொடர்பிலான அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விளையாட்டிலும் அரசியல்வாதிகளின் தலையீடு என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர். கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுக்களும் சார்ந்த மைதானங்கள் புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்பாடாக உள்ளது.

ஆனால் பிரதேச, தொகுதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு ரீதியில் இவற்றை செயற்படுத்த முயலும் போது இவை திறமையுள்ளவர்களுக்குச் சென்றடையாமல் அரசியல்வாதிகளுடன் நட்புடன் இருப்பவர்களையே சென்றடையும்.

எனவே திறமையானவர்களை இனங்காண்பதற்கு நாங்களும் உதவுகின்றோம். அவர்களை இனங்கண்டு அவர்களுடைய திறமைகளை விருத்தி செய்வதற்குரிய முயற்சிகள் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும்.

பாடல் பாடிய யொஹானிக்கு கொழும்பில் வீடொன்றினை அமைத்துக் கொடுத்துள்ள அரசாங்கம் 71 வயதான முல்லைத்தீவினைச் சேர்ந்த Philippines Athletic Tournament இல் 2 தங்கப் பதக்கங்களை வென்ற அகிலத்திருநாயகிக்கு செய்யப்போவது என்ன? என்ற கேள்வியினையும் எழுப்பினார்.

கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் Under 19 Athletic குழுவில் தெரிவாகியுள்ளார். இவர் மேலும் முன்னேறிச் செல்லத் தேவையான வசதிகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்கின்றேன் மற்றும் செல்வசேகரன் ரிஷியுதன் எனும் இளைஞன் 6 விதமான பந்து வீசும் திறமையுடையவராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இவரை “முத்தையா” எனவும் அழைக்கின்றனர். மேலும் இவர் 4 ஓவர் இல் எந்தவித ஓட்டங்களும் எடுக்கப்படாமல் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை ஒரு பெரிய சாதனையாகும். இவர்களைப் போன்ற எமது நாட்டின் பொக்கிஷங்களை உள்வாங்கி இவர்களுக்கு தேவையான விருத்திகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

72 வயதிலும் சாதனை படைத்த அகிலத்திருநாயகி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT