புதிய அரசை ஆதரிக்க போவதாக அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு | தினகரன்


புதிய அரசை ஆதரிக்க போவதாக அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு

புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், புதிய பிரதமருடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என்றார்.

நாடு தொடர்பில் சிந்தித்தே புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்தேன். ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையில் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும்.புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பணியாற்ற காலம் தேவை.சுமார் 3 மாத காலத்தில் தேவையான மாற்றங்களை செய்யவும் விருப்பு வாக்கு முறையற்ற தேர்தல் முறையை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐ.தே.க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலியே ரதன தேரர் ஹெல உருமய கட்சியில் அங்கம் வகித்ததோடு கடந்த பாராளுமன்றத்திலும் இவர் எம்.பியாக செயற்பட்டார். (பா)


Add new comment

Or log in with...