கோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை | தினகரன்

கோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை

கோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை-DA Rajapaksa Museum-Case Continued From Dec 4

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ, மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (09) முன்னிலையானபோது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், 07 குற்றப்பத்திரிகைகளின் கீழ், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கு தொடர்பில்  அவர் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி, மூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் 07 பேரும் முதல் முறையாக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது குறித்த 7 பேருக்கும் குற்றப்பத்திரிகையை வழங்கப்பட்டதோடு அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை இன்றையதினம் (09) வரை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...