இறந்த நாயை கண்டுபிடித்ததால் பாலியல் வழக்கிலிருந்து விடுதலை | தினகரன்

இறந்த நாயை கண்டுபிடித்ததால் பாலியல் வழக்கிலிருந்து விடுதலை

இறந்த நாயை கண்டுபிடித்ததால் பாலியல் வழக்கிலிருந்து விடுதலை-Lucy-the-Labrador-is-found-alive-Joshua-Horner-is-freed-from-50-year-jail-sentence-Joshua-Horner-and-his-wife-Kelli-Horner
தனது மனைவியுடன் ஹோனர், கண்டுபிடிக்கப்பட்ட நாய்


தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மகள் குற்றச்சாட்டு

நாய் ஒன்றை கண்டுபிடித்ததால், 50 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து நபர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகோனை (Oregon) சேர்ந்த ஒருவருக்கு வழக்கொன்றில் விதிக்கப்பட்ட 50 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து, அவர் கொன்றதாக தெரிவிக்கப்படும் நாயை கண்டுபிடித்ததையடுத்து, இரத்து செய்யப்பட்டுள்ளது.

தனது தந்தை, தனது சிறுவயதிலிருந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படும் வழக்கில் 42 வயதான ஜோஸுவா ஹோனர் (Joshua Horner)  என்பவர் மீது குற்றஞசாட்டப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு அது உண்மை என நிரூபிக்கப்பட்டது.

தான் செய்த குற்றத்தை வெளியில் சொன்னால் எனது செல்லப்பிராணிகளை தாக்குவதாக மிரட்டியதாகவும், லூசி எனும் எனது செல்லப்பிராணியான, லாப்ரடார் ரக நாயை தன் கண்ணெதிரே சுட்டுக்கொன்றதாகவும் சாட்சியமளித்திருந்தார்.

இந்த வழக்கை ஆய்வு செய்த 'ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ரொஜெக்ட்' (Oregon Innocence Project) என்னும் குழுவை சேர்ந்தோர் அந்த நாய் வேறொரு வீட்டில் இருந்ததை கண்டறிந்தனர்.

இறந்த நாயை கண்டுபிடித்ததால் பாலியல் வழக்கிலிருந்து விடுதலை-Lucy-the-Labrador-is-found-alive-Joshua-Horner-is-freed-from-50-year-jail-sentence-Joshua-Horner-and-his-wife-Kelli-Horner

இந்த வழக்கு விசாரணையின்போது ஏகமனதாக தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், தாங்கள் இந்த வழக்கு சார்ந்த ஆதாரங்களை ஆய்விற்கு உட்படுத்தியபோது அவை "பலத்த சந்தேகத்தை" ஏற்படுத்தியதாகவும் 'ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்' அரச சார்பற்ற சட்ட உதவி வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பு, சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கப்பட்ட நிரபராதிகளை காப்பாற்றுவதற்கான, சட்ட உதவி வழங்கும் அமைப்பாகும்.

கடந்த ஏப்ரல் மாதம், இந்த வழக்கு சார்ந்த சந்தேகங்களை முதலாவதாக ஒரு மாவட்ட வழக்கறிஞரிடம் விசாரித்த பிறகு, அவருடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியதாக அந்த அமைப்பு கூறுகிறது.

அந்த நாயின் இருப்பிடத்தை கண்டறிவதன் மூலம் இந்த வழக்கில் திருப்புமுனை உண்டாகும் சூழ்நிலை உருவானது. ஏனெனில், குற்றஞ்சாட்டப்பட்ட ஹோனர், தான் அந்த நாயை சுட்டுக்கொல்லவில்லை எனவும், அதை நிரூபிப்பதன் மூலம் முறைப்பாட்ட வழங்கியவரின் கூற்று பொய்யானது என்று நிறுவ முடியுமென்றும் கூறியிருந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் விள்கத்துடனான தனது தரப்பு விளக்கத்தை வழங்கியதால், ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ரொஜெக்ட்டின் விசாரணை அதிகாரியும், மாவட்ட வழக்கறிஞர் ஒருவரும் இணைந்து அந்த நாயை தேடி பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தனர்.

தீவிர முயற்சிக்கு பிறகு அந்த லாப்ரடார் நாயை அம்மாநிலத்தின் கடற்கரையோர பகுதியில் கண்டறிந்தனர்.

"தாழ்வாரத்தின் கீழே அமர்ந்துகொண்டு அது நீர் பருகிக்கொண்டிருந்ததை பார்த்த நாங்கள், அதனுடன் செல்லமாக விளையாடினோம். அது எங்களுக்கு அற்புதமான உணர்வாக இருந்தது" என, குறித்த அரசு சாரா சட்ட உதவி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலரான லிசா கிறிஸ்டோன் தெரிவித்துள்ளார்.

அந்த நாயின் தனித்துவமான தோற்றம் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்களை வைத்து, அது சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நாய்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இறந்த நாயை கண்டுபிடித்ததால் பாலியல் வழக்கிலிருந்து விடுதலை-Lucy-the-Labrador-is-found-alive-Joshua-Horner-is-freed-from-50-year-jail-sentence-Joshua-Horner-and-his-wife-Kelli-Horner

இதனையடுத்து "லூசி என்றழைக்கப்பட்ட அந்த நாய் சுடப்படவில்லை. லூசி உயிருடன் நல்ல நிலையில் இருக்கிறது" என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

"எங்களது விசாரணை அதிகாரியும், ஓரிகான் இன்னொசென்ஸ் ப்ரொஜெக்ட்டை சேர்ந்த விசாரணை அதிகாரியும் சேர்ந்து லூசி என்ற அந்த நாயை கண்டறிந்ததோடு, அதன் அடையாளத்தை உறுதிசெய்து, அதனுடன் இணைந்து புகைப்படமும் எடுத்தோம்."

குறித்த வாதங்களை கேட்ட ஓரிகான் மாநிலத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் ஹார்னெரை விடுதலை செய்ததுடன், மறுவிசாரணைக்கும் உத்தரவிட்டது.

அதன் பின், இவ்வழக்கைத் தொடர்ந்த அவரது மகளுடன், மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் ஊழியர் பேச முயற்சித்தபோது, அவரைச் சந்திக்க அவர் மறுத்துள்ளார்.

அதனை அடுத்து, கடந்த திங்கட்கிழமை (10) இவ்வழக்கு தொடர்பான மறுவிசாரணை இரத்து செய்யப்பட்டதோடு ஹோனர் விடுதலையும் செய்யப்பட்டார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஹோனர், இவ்வழக்கிலிருந்து தான் விடுவிக்கப்படுவதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்க்கொள்வதாகவும், இனி தானும் தனது மனைவியும் சேர்ந்து இயல்பான வாழ்க்கையை வாழவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...