நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி | தினகரன்


நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியல் பணிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் என மதச்சார்பற்ற அமைப்புகள் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த அணி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக மாறும், மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.


Add new comment

Or log in with...