லோர்ட்ஸ் டெஸ்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி அண்டர்சன் சாதனை | தினகரன்

லோர்ட்ஸ் டெஸ்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி அண்டர்சன் சாதனை

இங்கிலாந்து பந்து வீச்சாளர் அண்டர்சன், லோர்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்கு சுருடண்டது.

தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 396 ஒட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதையடுத்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இந்தியா 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜயை டக் அவுட்டாக்கினார் அண்டர்சன்.

இது லோர்ட்ஸ் மைதானத்தில் அவரது 100-வது விக்கெட்டாகும். இதன்மூலம் அண்டர்சன் லோர்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

தனி மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் வரிசையில் அண்டர்சன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையின் கண்டி மற்றும் கல்லே மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...