மாணவர்கள் இருவர் மூழ்கி பலி | தினகரன்

மாணவர்கள் இருவர் மூழ்கி பலி

மாணவர்கள் இருவர் மூழ்கி பலி-வியாங்கொட-2 Student Drown-Veyangoda
(வைப்பக படம்)

 

ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

இன்று (21) பிற்பகல் வியாங்கொட, தல்கஸ்மொட்ட பிரதேசத்திலுள்ள தீஎல்ல ஓயாவில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களான 16 வயதுடைய நிட்டம்புவவைச் சேர்ந்த, மதூக்க நிஸ்ஸங்க, வியாங்கொடவைச் சேர்ந்த, தமிந்து தேஜான் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய குறித்த இருவரும் மீட்கப்பட்டு, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இருவரினதும் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வியாங்கொட பொலிசார் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...