அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கவானொப் | தினகரன்

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கவானொப்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவானொப்பின் பெயரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

ஓய்வு பெறவிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி அன்டனி கெனடியின் பொறுப்புக்குச் சரியான நபரைத் தெரிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நியமனங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை அது குறித்து முடிவெடுக்கும்.

பழைமைவாதப் போக்கைப் பின்பற்றும் கவானொப், 1990களில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் மீது பதிவான வழக்கில் விசாரணை மேற்கொண்டவர்களில் ஒருவராவார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளவர்களுக்கு ஓய்வு வயது இல்லை. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக இருக்கலாம். தாங்களாக முன்வந்து மட்டுமே ஓய்வை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...