ரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது | தினகரன்

ரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது

ரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது-Malidivian Arrested with Rs. 2 Crore worth Heroin

 

ரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மாலைதீவைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான 33 வயதான குறித்த சந்தேகநபர், நேற்று (22) பிற்பகல் 6.45 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் புறப்படும் பகுதியில் வைத்து, 2 கிலோ 39 கிராம் 340 மில்லி கிராம் எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தற்போதைய வருகையுடன் சேர்த்து கடந்த 2016 முதல் 16 தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

மாலைதீவு நாட்டவரான கைதான குறித்த சந்தேகநபரை இன்று (23) மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி 7 நாட்களுக்கு தடுத்து விசாரிக்க உத்தரவு பெறவுள்ளதோடு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...