Saturday, April 27, 2024
Home » இலாபமீட்டிய பொலனறுவை டிப்போ உத்தியோகத்தர்களுக்கு விருது

இலாபமீட்டிய பொலனறுவை டிப்போ உத்தியோகத்தர்களுக்கு விருது

by damith
November 13, 2023 6:20 am 0 comment

சவால்கள் கஷ்டங்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்பான சேவைகள் ,முறையான முகாமைத்துவ நடவடிக்கைகள் மூலம் இலாபமீட்டும் நிறுவனங்களாக சில டிப்போக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2023 உலக பொது போக்குவரத்து தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்ற சேவையாளர்களை பாராட்டி விருதுவழங்கும் நிகழ்வில், உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் அதிக வருமானத்தை பெற்றுள்ள டிப்போவாக பொலன்னறுவை டிப்போ விருதைப் பெற்றுள்ளது.மேலும், ரஜரட்ட பிரதேச டிப்போ அதிகாரிகளும் சிறந்த முகாமைத்துவ விருதினைப் பெற்றுள்ளனர். மேற்படி நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த சில வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சவால்களுக்கு மத்தியிலும் 100 மில்லியனுக்கு அதிகமான இலாபத்தை பொலன்னறுவை டிப்போ பெற்றுள்ளது.

அதேவேளை ரஜரட்ட பிரதேச உத்தியோகத்தர்கள் 300 மில்லியன் ரூபாவை இலாபமாகப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது கௌரவத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது நாட்டிலுள்ள ஏனைய டிப்போக்களுக்கும் முன்மாதிரியானதாகும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT