பிரதமருக்கு எதிராக 55 பேரின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்

பிரதமருக்கு எதிராக 55 பேரின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமருக்கு எதிராக 55 பேரின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை-No Confidence Motion Against Ranil Wickramasinghe

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் இன்று (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 51 எம்.பி.க்கள் உள்ளிட்ட இந்நம்பிக்கையில்லா பிரேரணையில்  55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

டி.பீ ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, காதர் மஸ்தான் ஆகிய நான்கு சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நம்பிக்கையில்லா பிரேரணை, மஹிந்த ராஜபக்ஷ எம்.பியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...