பத்மஸ்ரீ விருது வென்ற முன்னணி பத்திரிக்கையாளர் முசாபர் ஹுசைன் மரணம் | தினகரன்

பத்மஸ்ரீ விருது வென்ற முன்னணி பத்திரிக்கையாளர் முசாபர் ஹுசைன் மரணம்

பத்மஸ்ரீ விருது வென்ற முன்னணி பத்திரிக்கையாளரான முசாபர் ஹுசைன் மும்பையில் நேற்றுமுன்தினம் மரணமடைந்தார்.

மும்பையை சேர்ந்த முன்னணி பத்திரிக்கையாளர் முசாபர் ஹுசைன். இவர் கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

பல்வேறு மொழிகளை கற்றுத்தேர்ந்த இவர், இலக்கிய பிரிவில் பல மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு இலக்கியத்துக்காக பத்மஸ்ரீ விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. 78 வயதான ஹுசைன் மும்பையில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக பல நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த ஹுசைன் கடந்த ஜனவரி 30-ம் திகதி முதல் விக்ரோலி பகுதியில் உள்ள ஹிராநந்தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஹுசைன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு மரணமடைந்தார். அவரது மறைவிற்கு மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 


Add new comment

Or log in with...