ஊவா தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் | தினகரன்

ஊவா தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான்

 

ஊவா மாகாண சபையின் தமிழ் கல்வியமைச்சராக ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் தொண்டமான் இன்று (24) ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்

இலங்க தொழிலாளர் காங்கிரசின் சிரேஷ்ட உதவித் தலைவரான செந்தில் தொண்டமான், ஊவா மாகாண பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, வீதி, நீர் வழங்கல் மற்றும் கூட்டுறவு அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் நிலையிலேயே குறித்த அமைச்சு பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை மண்டியிட்ட சம்பவத்தையடுத்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு உதவும் வகையில், ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியிலிருந்து, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து மாகாண தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...