எம்.ஜி.ஆருக்கு மரியாதை | தினகரன்

எம்.ஜி.ஆருக்கு மரியாதை

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படங்களை அலங்கரித்து மரியாதை செலுத்தினர். அவர் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள டொக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...