கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் | தினகரன்

கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும் எழுதவும் ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார்.

தேவதாயாக பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது? தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது.

உடனே கட்டுரையை மாற்றி எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப் போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...