லாஸ் வெகாஸ் தாக்குதல்; இது வரை 20 பேர் பலி; 100 பேர் காயம் (UPDATE) | தினகரன்

லாஸ் வெகாஸ் தாக்குதல்; இது வரை 20 பேர் பலி; 100 பேர் காயம் (UPDATE)

 
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இத்தாக்குதல் சம்பவத்தில் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

அமெரிக்க லாஸ் வெகாஸில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி ; 24 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
 
இந்த சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நேரப்படி நேற்று (01) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
 
'மண்டேலே பே' (Mandalay Bay) எனும் சூதாட்ட விடுதிக்கு முன்னால் திறந்த வெளியில் இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சியின் போது, ஆயுதம் தாங்கிய நபர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அத்துடன் லாஸ் வெகாஸ் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், காயடைந்துள்ளவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை சந்நேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக லாஸ் வெகாஸ் நகர பொலிஸார் அறிவித்துள்ளனர்
 
 
லாஸ் வெகாசில் தற்போது நேரம் மு.டி. 12.42 (இலங்கையில் பி.ப. 1.12)
 
 
 

Add new comment

Or log in with...