அருகாமை பால்வெளிக்கு செல்லும் நட்சத்திரங்கள் | தினகரன்

அருகாமை பால்வெளிக்கு செல்லும் நட்சத்திரங்கள்

பால் வீதி மண்டலத்தில் உள்ள வேகமான நட்சத்திரங்கள் ஏனைய பால்வெளி மண்டலங்களில் இருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹப்பர்வெலாசிட்டி நட்சத்திரங்கள் என்று அறியப்படும் இந்த நட்சத்திரங்கள் விநாடிக்கு 630 மைல்கள் வேகத்தில் நகருகின்றன. இவை சில தருணங்களிலேயே அவதானிக்க முடிகிறது.

இந்த கண்டுபிடிப்பு மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அண்டைய பால்வெளி மண்டலங்களின் திணியை அளவிட முடியுமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கடந்த 2005 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் வெறும் இரு டஜன் மிக அரிதான நீல நட்சத்திரங்களையே எமது பால் வீதியில் அவதானிக்க முடிந்துள்ளது.

இந்த நட்சத்திரங்கள் எமது பால் வீதியில் பிறந்தவை என்றே விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். எனினும் பால் வீதி விளிம்பில் இருக்கும் இந்த நட்சத்திரங்கள் அங்கிருந்து வெளியேறி மற்றொரு அருகாமை பால்வெளி மண்டலத்திற்கு செல்வதை புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. 


Add new comment

Or log in with...