மயக்கும் மதுர மல்லி

 

மல்லி மல்லி.....குண்டு மல்லி.... ஆள அசத்துதடி அது துள்ளி துள்ளி... என்னையுந்தான் மேல ஒசத்துதடி....

மயக்கும் மதுர மல்லி' நம்ம ஊரு மீராவை பார்க்கும் போது, இப்படித்தான் பாடத்தோன்றுகிறது. கட்டுக்குலையாத கனவுக்கன்னியாக, நம்ம ஊரு கலாசார காவல் தேவதையாக, எல்லையில்லா எல்லோரா ஓவியமாக, கொடி இடையாளாக மீரா வலம் வருகிறார். உள்ளூரு மாடு விலை போகாது.

இப்படித்தான் நம்ம ஊரு சினிமாக்காரர்கள் நினைத்துக்கொண்டு, 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்ற மாயை உலகில் உள்ளனர். அதனால் தான் எத்தனையோ திறமையான தமிழ் நடிகைகள் கூட காலச்சக்கரத்தில் காணாமல் போய் விட்டனர். இவர்கள் மத்தியில், மதுரை மீரா, புதுமுக நடிகையாக சத்தமின்றி சந்தோஷமாக வலம் வருகிறார். பரமக்குடியில் போட்டோ கிராபர்கள் சங்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

அவரது மனம் திறந்த வெகுளிப் பேச்சு இதோ...* உங்களைப் பற்றி..முத்தமிழ் வளர்த்த, மதுரை மண்ணில் பிறந்த சங்கத் தமிழ் மொழிக்கு சொந்தக்காரி. பிளஸ் 2 முடித்துவிட்டு, தகவல் தொழில் நுட்பம் படித்து வருகிறேன்.* நடித்துள்ள படங்கள்?ரெங்கராஜ் மற்றும் வேதாஜிபாண்டியன் இயக்கத்தில் 'தரிசுநிலம்', ராமன் இயக்கத்தில் 'குக்கிராமம்', வேல்முருகன் இயக்கத்தில் 'வாய்த்தகராறு' படங்களில் நடித்துள்ளேன்.* என்ன மாதிரியான கேரக்டர்களில் நடித்தீர்கள்?வில்லித்தனமான கிராமத்துப் பெண்ணாக, தரிசு நிலம் படத்தில் பூங்கொடியாக, குக்கிராமம் படத்தில் கருவாச்சி கவிதாவாக, வாய்த்தகராறு படத்தில் அஞ்சலையாக நடித்துள்ளேன்.

* பிடித்த கேரக்டர் ரோல் குறித்து...வில்லித்தனமான கிராமத்துப் பெண், ஆண்களை ஜொள்ளுவிட வைக்கும் நாயகியாக பவர் ஸ்டார், சிங்கம்புலி, போண்டாமணியுடன் இணைந்து நடித்தது மிகவும் பிடித்தது.* சினிமாத்துறை ஆர்வம்?மாடலிங் துறையில் இருந்துகொண்டே, விடாமுயற்சி மேற்கொண்டதால் சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைத்தது.

* யாருடைய முயற்சியால்...சினிமா பிரவேசத்திற்கு உறவினர்கள் மத்தியில் சிறிய எதிர்ப்பு கிளம்பியது. அதை தைரியமாக எதிர் கொண்டு சினிமாத் துறையில் நுழைந்தேன். மற்றபடி அரசியல், சினிமா பிரபலங்கள் யாருடைய துணையும் கிடையாது.

அப்பா ஒருவர் மட்டுமே துணை.* பெரிய பட்ஜெட் பட வாய்ப்பு...விக்ரம் ரஜினி இயக்கத்தில் அருண்விஜய் ஜோடியாக நடிக்க உள்ளேன்.* பிடித்த நடிகர்?எதுக்கு வம்பு; எல்லோரையும் தான் பிடிக்கும்.* பிடித்த நடிகை?நயன்தாராவைப் போல் சூப்பர் ஸ்டாராக ஆசை.* சினிமாவில் லட்சியம்..பணத்திற்காக நடிக்க வரவில்லை. பட்ஜெட் படங்களில் நடிக்க தயார். திறமையை வெளிப்படுத்தி தேசிய விருது பெறுவதே லட்சியம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
8 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...