எல்லை நிர்ணய அறிக்கையில் சு.க. கைச்சாத்து | தினகரன்

எல்லை நிர்ணய அறிக்கையில் சு.க. கைச்சாத்து

 
உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில், எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரித்துள்ளது.
 
அக்குழுவில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியின் பிரதிநிதியான முன்னாள் சப்ரகமுவ மாகாண ஆளுநரும் சட்டத்தரணியுமான சாலிய மெத்திவ் இன்று (04) அதில் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐவர் அடங்கிய எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்கும் மூவர் கையொப்பமிட்ட நிலையில் ஐ.தே.க மற்றும் சு.க. பிரதிநிதிகள் கையொப்பமிடாத நிலையில் அவ்வறிக்கை, உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் (02) நிராகரிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையிலேயே சு.க. இதனை அங்கீகரித்துள்ளதோடு, இதுவரை ஐ.தே.க.வின் பிரதிநிதியான சட்டத்தரணி மிஸ்பா சத்தார் மாத்திரம் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...