Home » ‘Innovation Day 2023’ ஐ வெற்றிகரமாக முன்னெடுத்தது SLT-MOBITEL

‘Innovation Day 2023’ ஐ வெற்றிகரமாக முன்னெடுத்தது SLT-MOBITEL

by Gayan Abeykoon
May 1, 2024 6:42 am 0 comment

ஆக்கத்திறன் மற்றும் தூரநோக்குடைய சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்தி, SLT-MOBITEL இனால் முதன் முறையாக ‘Innovation Day 2023 நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் மற்றும் வளர்ந்து வரும் வெளியக தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. மருதானை, ட்ரேஸ் சிற்றியில் அமைந்துள்ள SLT-MOBITEL R&D நிலையமான The Embryo இல் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஆக்கத்திறன் மற்றும் சிறப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிகழ்வினூடாக SLT-MOBITEL R&D அணி, நிறுவனத்தின் உள்ளக தொழில்முயற்சியாளர்கள், தொழில்முயற்சியாண்மை ஸ்ரூடியோ ஊடாக மற்றும் வெளியக தொழில்முயற்சியாளர்கள் தொழில்முயற்சியாண்மை ஸ்ரூடியோ ஊடாக நவீன தீர்வுகள் வெளிப்படுத்தப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு தமது புத்தாக்கங்களை காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்ததுடன், அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் அவர்கள் உரையாற்றியிருந்ததுடன், ஊக்குவிப்பு உரைகளை வழங்கியிருந்தனர். பங்கேற்றிருந்தவர்களில் ஊழியர்கள், பங்காளர்கள், தொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள், தொழில்நுட்ப சமூகம் மற்றும் அழைக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போன்றவர்கள் அடங்கியிருந்தனர்.

Innovation Day ஐ முன்னெடுத்திருந்ததனூடாக கண்டுபிடிப்புகள் அடிப்படையில் இயங்கும் டிஜிட்டல் சேவை வழங்குநர் எனும் தனது நிலையை SLT-MOBITEL உறுதி செய்திருந்தது. வியாபாரங்களுக்கான புதிய தயாரிப்பு கொள்கைகளை இந்த நிகழ்வு வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருந்ததுடன், வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி, மூலோபாய பங்காண்மைகளை கட்டியெழுப்பிக் கொள்ள உதவி, வெளியக பங்காளர்களுடன் வியாபார தொடர்புகளை ஏற்படுத்த மற்றும் இலங்கையில் எதிர்கால டிஜிட்டல் புத்தாக்கத்தை கட்டமைக்க பங்களிப்பு வழங்கியிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT