Sunday, May 19, 2024
Home » LOLC Life Assurance நிறுவனத்துடன் வங்கிக் காப்புறுதித் திட்ட பங்குடைமையில் இணையும் SDB வங்கி

LOLC Life Assurance நிறுவனத்துடன் வங்கிக் காப்புறுதித் திட்ட பங்குடைமையில் இணையும் SDB வங்கி

- SDB வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமானதும் விரைவானதுமானது மிகச் சிறந்த ஆயுள் காப்புறுதித் தீர்வு

by Rizwan Segu Mohideen
April 30, 2024 4:41 pm 0 comment

நீண்ட நிதி  மற்றும் காப்புறுதி சேவைகளை வளப்படுத்துவதனை நோக்கியதான ஒரு முக்கிய முன்னெடுப்பாக SDB வங்கியானது LOLC Life Assurance நிறுவனத்துடனான வங்கிக் காப்புறுதித் திட்ட பங்குடைமை குறித்து அறிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றது.

ஆயுள் காப்புறுதி திட்டங்களை  சௌகரியமான அணுகலுடன் SDB வங்கி வாடிக்கையாளர்களிற்கு வழங்குவதிலும் LOLC Life Assurance இன் நிபுணத்துவத்தினை உயர்த்துவதிலும் மற்றும் SDB வங்கியின் விரிவான கிளை வலையமைப்பிற்குள் அதனது சலுகைகளை ஒருங்கிணைப்பதிலுமாக இக்கூட்டிணைவானது முக்கிய மைற்கல்லை குறித்துநிற்கின்றது.  

இப்பங்குடைமையின் ஊடாக  வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் காப்புறுதிச் சேவைகளை ஒரே கூரையின்கீழ் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதானது தற்போதையதும் முக்கியமானவர்களுமான  வாடிக்கையாளர்களுக்கான தடையற்ற சேவை அனுபவங்களை வளப்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இத்துவக்கமானது பொருத்தமான காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் LOLC Life Assurance இன் நிபுணத்துவத்துடன் SDB வங்கியின் வலுவான வங்கி வலையமைப்பை ஒருங்கிணைத்து இரு நிறுவனங்களினதும் பலத்தினை உயர்த்தக்கூடியதாக விளங்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இந்நன்மைபயக்கும் பங்குடைமையின் துவக்கத்தினை குறிக்கும் முகமாக புரிந்துணர்வு ஒப்பந்தமானது 22 ஏப்ரல் 2024 அன்று SDB வங்கியின் தலைமை அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தமானது SDB வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. நிரஞ்சன் தங்கராஜா மற்றும் LOLC Life Assurance நிறுவனத்தின் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி. நதிகா ஒபதா ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது. “எமது வாடிக்கையாளர்களிற்கு முழுதளாவிய சேவை அனுபவத்தை வழங்குவதிலான SDB வங்கயின் அர்ப்பணிப்பிற்கானவொரு சான்றாக LOLC Life Assurance உடனான இவ்விணைவு காணப்படுகின்றது. எமது வலையமைப்பிற்குள்ளாக காப்புறுதி சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் நாம் எமது சேவைகளை விஸ்தரிப்பது மாத்திரமின்றி SDB வங்கியுடன் எமது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் சௌகரியங்களையும் நம்பிக்கையையும் நாம் அவர்களிற்கு வழங்குகின்றோம் எனக்குறிப்பிட்டு தம்முடைய பங்குடைமை குறித்த உற்சாகங்களை பகிர்ந்துக்கொண்டார் திரு. தங்கராஜா அவர்கள். 

இப்பங்குடைமையானது தங்களுடைய வாடிக்கையாளர்களிற்கு அதிசிறந்த சேவைகளையும் மதிப்பையும் வழங்குவதிலான இரு நிறுவனங்களது அர்ப்பணிப்பினையும் பிரதிபலிக்கும் வகையில் SDB வங்கியின் ஒரு புதிய அத்தியாயத்தினை கட்டமைக்கும் முகமாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. 

SDB வங்கி குறித்து
எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளிற்கென தயாரிக்கப்பட்ட சௌகரிய உதவிக்கென அர்ப்பணிக்கப்பட்ட SDB வங்கியானது கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் பிட்ச் ரேட்டிங்கின்  BB+(lka) பட்டியற்படுத்தல்களுடன் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேட வங்கியாகும். நாடளாவிய ரீதியில் 94 கிளைகளுடனான வலையமைப்புடன்  நாடு முழுவதிலுமான தனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மையாளர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மற்றும் வியாபார வங்கி வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையிலான நிதித் சேவைகளை வங்கி வழங்குகின்றது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் நல்லாட்சி கோட்பாடுகளானவை நிலைபேண் நடைமுறைகள் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் உறுதியான குவிமையத்துடன் SDB  வங்கியின் நெறிமுறைகளுடன் ஆழமாக பிணைந்ததாக காணப்படுகின்றது. வங்கியானது இலங்கையை புதிய உச்சங்களிற்கு உந்தும் நோக்குடன் பெண்களது வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மையாளர்களது நிலைத்த அபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளீர்ப்பு என்பவற்றிற்கென குறிப்பான அர்ப்பணிப்புமிக்கதாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT