Monday, May 6, 2024
Home » வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கு அழைப்பு
இந்திய DDUGU பல்கலைக்கழகத்துக்கு

வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கு அழைப்பு

by Gayan Abeykoon
April 24, 2024 8:19 am 0 comment

தீன் தயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சர்வதேச மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் செய்தி வெளியிட்டு்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகம் (Deen Dayal Upadhyaya Gorakhpur University, Gorakhpur) அதன் Undergraduate திட்டத்துக்கு விண்ணப்பிக்க சர்வதேச மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் Deen Dayal Upadhyaya Gorakhpur University 1957 இல் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம். இது இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது.   இப்பல்கலைக்கழகம் ஒரு வளமான கல்வி மரபு, தகுதி மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரிய உறுப்பினர் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி வசதிகளைக் கொண்டுள்ளது.

தேவையான விவரங்கள் பின்வரும் இணையத்தளத்தில் பார்வையிடலாம். https://dduguadmission.in/intcell/. பதிவு செய்வதற்கான கடைசி திகதி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி என்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT