Monday, May 6, 2024
Home » மத்திய கிழக்கை, அரசியலை புரிய வைக்கும் நூல்: ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’

மத்திய கிழக்கை, அரசியலை புரிய வைக்கும் நூல்: ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’

எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன்

by Gayan Abeykoon
April 24, 2024 8:00 am 0 comment

உலக அரசியல் சார்ந்த விடயங்களை நாம் அதிகமும் கற்றுக்கொள்வது இன்றைய உலக அரசியலின் போக்கை புரிந்து கொள்ளவும் ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் உதவும் என இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிக்கலான அரசியலை புரிந்துகொள்ள ஜீவநதி பதிப்பகத்தின் 351 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அரசியல் நிலைவரங்கள்:

“குறித்த ஆழமான புரிதலை எழுத்தாளர் ஐங்கரன் கொண்டிருப்பதற்கு உலக வரலாறு குறித்த அவரது அரசியல் அறிவும், உலக அரசியல் குறித்த அவரது ஆழமான புரிதலும்தான் அடிப்படையானவை.

உலக அரசியலின் முகங்களை, ஆயுத அரசியலின் அர்த்தங்களை, ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை, சமகால உலக அரசியலில் பொதிந்துள்ள தந்திரங்களின் முகங்களை என இவர் தன் எழுத்துக்களின் வழியாக தரும் செய்திகள் மிகவும் அதிர்வு தரக்கூடியவை” என்றும் இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

“எழுத்து வழியாக மிக நெடுங்காலமாக தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பங்களிப்பை செய்து வருபவர் விக்கினேஸ்வரா ஐங்கரன் அவர்கள்.

இன்றுவரை எழுத்தாகட்டும், மனிதாபிமானச் செயல்களாட்டும் துடிதுடிப்பான ஒரு இளைஞனாகவே எனக்கு எழுத்துக்களின் வழியும் செயற்பாடுகளின் வழியும் தென்படுகின்றார்.

கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் என்று இடையறாத பயணத்தை தொடர்கின்ற ஐங்கரன், இலங்கைப் பதிரிகைகளிலும் சர்வதேசப் பத்திரிகைகளிலும் அவர் எழுதி வரும் பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள் இன்றளவும் முக்கியமானவை. அவை பல நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

அரசியலை, மக்கள் உணர்வு நிலையை, போராட்டத்தை, பல்வேறு விழிப்புணர்வூட்டும் செய்திகளை மிகவும் சுவாரசியமான முறையில் இவர் எழுதுகின்றார். புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் வாழ்கின்ற போதும், தினம்தோறும் பல கட்டுரைகளை எழுதிக் கொண்டே இருக்கின்றார். எனக்கு மாத்திரமல்ல, பலருக்கும் அது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. உலகின் சமகால நிகழ்வுகளை மாத்திரமின்றி, வரலாற்று நிகழ்வுகளையும் நினைவுபடுத்தும் பல முக்கிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், பத்திரிகைத்துறை சார்ந்த தகவல்களையும் பத்திரிகைத்துறை ஆளுமைகள் சார்ந்த தகவல்களையும்கூட தன் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். காலத்திற்கு முந்தைய தலைமுறையில் இருந்து இன்றைய தலைமுறை வரையான இந்த அவதானம் வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது.

சில மாதங்களின் முன்னர் வெளியான ‘பாலஸ்தீனம் எரியும் தேசம்’ என்ற கட்டுரை நூல் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ என்ற புதிய நூல், உலக அரசியலை புரிந்துகொள்ள உதவும் இவரின் எழுத்துக்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு தொகுதியாக இருக்கும்” என்றும் எழுத்தாளர் தீபச்செல்வன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தீபச்செல்வன் 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT