Monday, May 6, 2024
Home » குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்
கண்டி மாவட்டத்தில்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

by Gayan Abeykoon
April 24, 2024 7:57 am 0 comment

கண்டி மாவட்டத்தில்  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  12000 பேர் இதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குனதிலக ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மொகான் தர்மதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான வழிகாட்டல்களை கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் மேற்கொண்டிருந்தார்.கண்டி மாவட்டத்தில் மொத்தமாக குறைந்த வருமானம் கொண்டவர்களாக இரண்டு இலட்சத்து ஆயிரத்து இருபத்து ஐந்து குடும்பங்கள் இனம்காணப்பட்டிருந்தனர்.

இதில் குண்டசாலைத் தொகுதியில் அதிகமானோர் இனம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் 16222 பேர்  இனம் காணப்பட்டுள்ளனர்.  ஆகக் குறைந்தவர்கள் கலகெதர பிரதேச செயலாளர் பிரிவில் இனம்காணப்பட்டுள்ளனர்.

அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT