Thursday, May 2, 2024
Home » ஐ.ம.சக்தியின் பெலியத்தை தொகுதி அமைப்பாளர் பிரவீன் ஐ.தே.கவில் இணைவு

ஐ.ம.சக்தியின் பெலியத்தை தொகுதி அமைப்பாளர் பிரவீன் ஐ.தே.கவில் இணைவு

by Gayan Abeykoon
April 19, 2024 3:24 pm 0 comment

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெலியத்த தொகுதி அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ருவிந்த அதபத்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர  அபேவர்தனவிடமிருந்து கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் பிடகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவுக்கு வருகை தந்துள்ள பிரவீன் ருவிந்த அத்தபத்து ஐ. தே. க. தவிசாளரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதுடன் அதனையடுத்து கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் சுமுகமான கலந்துரையாடலுக்குப் பின் தமது முழுமையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த கலந்துரையாடலையடுத்து நேற்று அவர் ஸ்ரீ கொத்தவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT