Home » ஜனாதிபதியாக ரணில் இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும்

ஜனாதிபதியாக ரணில் இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும்

எரிக்சொல்ஹெய்மிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

by Gayan Abeykoon
May 1, 2024 9:05 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையுமென்பதே எமது நிலைப்பாடாகுமென, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று எரிக்சொல்ஹெய்மிடம் தெரிவித்தார்.

நாட்டினன் முன்னாள் சமாதானத் தூதுவரான நோர்வே பிரதி நிதி எரிக்சொல்ஹெய்ம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பிலே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக இவர்கள் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வை பெற்றுத்தரக் கூடியவரா கவும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரபலமிக்கவ ராக உள்ளார்.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதே சிறந்தது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வைக்கான முடியும் என்பதை தொடர்ந்தும் கூறிவருகிறோம்.

பிரபாகரனின் போக்கு தொடர்ந்தால் 2009ஆண்டு முடிவையே எதிர்கொள்ள நேரிடுமென, 28 ஆண்டுகளுக்கு முன்னரே, எரிக்சொல்ஹெய்மிடம் தாம், கூறியதையும் அமைச்சர் டக்ளஸ் நினைவூட்டினார்.

நோர்வே அரசின் உதவிகளை கடற்றொழிலாள ர்களுக்கு பெற்றுத்தருமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பில், நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமன்சு குலட்டியும், கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் டொக்டர் எஸ். தவராசா மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் பாரூக் அஸீஸும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT