Home » நட்டமீட்டிய அரச நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் இலாபம்

நட்டமீட்டிய அரச நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் இலாபம்

அரசின் சிறந்த நடவடிக்கைகளே காரணம்

by Gayan Abeykoon
May 1, 2024 9:02 am 0 comment

பில்லியன் கணக்கில் நட்டமீட்டிய அரச நிறுவனங்கள் தற்போது பில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டி வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு 743 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள அரச நிறுவனங்கள், 2023 இல்,   456 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிவாரண அடிப்படையில் செயற்படும் நிறுவனங்கள்,   உற்பத்திக்கான செலவு முறையான கட்டண நிர்ணயம் போன்றவற்றை முன்னெடுத்துள்ள மையே  இலாபமீட்டக் காரணமானதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏனைய அரச நிறுவனங்களை மிகவும் பலன் தரும் மட்டத்திற்கு கொண்டு வருவதற்காக, தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வும்  இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  இதன் மூலம் அரசாங்கத்திற்கு அதன் அடிப்படை பொறுப்புக்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் வரி வருமானத்தின் பலனை உறுதிப்படுத்தும் வகையில்,  இதன் மூலம் வாய்ப்பு கிடைப்பதாகவும் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பிரிவுகள் தொடர்பில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு  இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT