Thursday, May 2, 2024
Home » டயலொக், எயார்டெல் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட ஒப்பந்தம்

டயலொக், எயார்டெல் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட ஒப்பந்தம்

by Gayan Abeykoon
April 19, 2024 9:26 am 0 comment

டயலொக்கும் ஆசி ஆட்டா குழுமமும் பார்த்தி எயார்டெல்லும்  தொழிற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. பங்குதாரர்களின் வருவாயை மேம்படுத்தவும் வாடிக்கையாளர் களுக்கு உன்னதமான அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இந்நிறுவனங்கள் இணைந்து செயற்படவுள்ளன.

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி (“Dialog”), ஆசி ஆட்டா குழுமம் பெர்ஹாட் (“Axiata”) மற்றும் பார்த்தி எயார்டெல் லிமிடட்  (“Bharti Airtel”) ஆகியன பார்த்தி (“Airtel Lanka”) எயார் டெல்லங்கா  லிமிடட்டின் வெளியிடப்பட்ட பங்குகளை முழுமையாக கையகப்படுத்துதல் குறித்த வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு 2024. 04. 18 இல் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த உடன்படிக்கையின் கீழ், எயார்டெல் லங்காவின் வெளியிடப்பட்ட பங்குகளில் நூறு வீதத்தை டயலொக் நிறுவனம் கையகப்படுத்தும். அதேவேளை, டயலொக்கின்  வெளியிடப்பட்ட 10.355 வீத மொத்த மதிப்பிலான சாதாரண வாக்குரிமை பங்குகளை பங்கு மாற்று முறை மூலம் பார்த்தி டயலொக் நிறுவனம் எயார்டெலுக்கு வழங்கவுள்ளது.

இந்த பரிவர்த்தனை டயலொக் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  மற்றும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்திசெய்யும் வரை இவை,நிலுவையிலும் இருக்கும் என, பார்த்தி எயார்டெல் லிமிடட் கூட்டுத்தாபன தொடர்பாடல்கள் சிரேஷ்ட துணைத் தலைவர் கின்ஷூக்குப்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT