Home » சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள கடுகண்ணாவை

சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள கடுகண்ணாவை

மதிப்பீட்டு பணி முன்னெடுப்பு

by Gayan Abeykoon
April 19, 2024 9:06 am 0 comment

கடுகண்ணாவை பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதை தொடர்ந்து அதற்கான மதிப்பீட்டு பணியை மத்திய மாகாண அதிகாரிகள் குழுவினர் நேற்று மேற்கொண்டனர்.

மத்திய மாகாணத்தில் பல இடங்கள் சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதிலொன்றே கடுகண்ணாவை சுற்றுலா வலய அபிவிருத்தியாகும்.

மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமவன்ச தலைமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று மதிப்பீட்டு பணியை மேற்கொண்டனர்.

கண்டி – – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான கடுகண்ணாவை பல்வேறு சுற்றுலா அம்சம் பொருந்திய பிரதேசமாகும்.

கடுகண்ணாவை நுழைவாயிலுள்ள குடையப்பட்ட கடுகண்ணாவை கற்பாறை, கடுகண்ணாவை டோசன் கோபுரம், கடுகண்ணாவை வாடிவீடு, கடுகண்ணாவை ரயில் அருங்காட்சியகம், கடுகண்ணாவை பசளை களஞ்சியத்தொகுதி உள்ளிட்ட முக்கிய சான்றுகளை கொண்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகவும் கடுகண்ணாவை உள்ளது.

அக்குறணை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT