Sunday, May 19, 2024
Home » “Great Place to Work” சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் HNB FINANCE PLC

“Great Place to Work” சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் HNB FINANCE PLC

by Rizwan Segu Mohideen
April 17, 2024 11:26 am 0 comment

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, அதன் சிறப்பை நிரூபித்து, பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களின் வரிசையில் மீண்டும்  இணைந்துள்ளது.

பெருநிறுவன துறையில் உகந்த பணிச்சூழலைக் கொண்ட வணிகங்களை அங்கீகரித்து, அவ் நிறுவனங்களை ஆண்டுதோறும் Great Place to Work தரப்படுத்தலின் மூலம் மதிப்பீடு செய்வதன் ஊடாக 2024 ஆம் ஆண்டிற்கான இந்த கெளரவமான அங்கீகாரத்தை HNB FINANCE நிறுவனமும் பெற்றுள்ளது.

சர்வதேச அங்கீகாரத்துடன் Great Place To Workஇல், வணிக சூழல், பணியாளர் அனுபவம் மற்றும் பெருநிறுவன தலைமையின் கண்ணோட்டம் போன்ற காரணிகள் தொடர்பாக நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மற்றும் நம்பிக்கையின் மூலம் அந்த வணிகங்கள் அடைந்த முன்னேற்றம், அந்த வணிகங்களில் தங்கியிருக்கும் பணியாளர்கள் மற்றும் புத்தாக்க திறன்களின் வளர்ச்சி எப்படி நடந்தது என்பது குறித்து தணிக்கை நடத்தப்படும்.

HNB FINANCE PLC இன் இந்த சாதனை குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு சமிந்த பிரபாத் கருத்துத் தெரிவிக்கையில், “நிதி நிறுவனமாக எங்களின் வெற்றி HNB FINANCE குடும்பத்தின் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களின் மீது தங்கியுள்ளது. எனவே, சேவை அனுபவத்தை மிகச் சிறந்த மற்றும் உகந்த நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம், ஊழியர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் நாங்கள் தொடர்ந்து பராமரிக்க முடிந்தது. பல ஆண்டுகளாக Great Place To Work ஆக அங்கீகரிக்கப்பட்டதை இதற்குச் சுட்டிக்காட்டக்கூடிய சிறந்த உதாரணம் என்று கூறலாம்.” என தெரிவித்தார்.

HNB FINANCE PLC, நிறுவனத்தின் அனைத்து சேவை வளாகங்களையும் மிகவும் இனிமையானதாகவும், பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரியும் இடமாகவும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

HNB FINANCE பணியிடத்தை மிகவும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு பட்டறைகள் மற்றும் விரிவுரைகளை ஏற்பாடு செய்யப்படுகின்றன, மேலும் இந்த திட்டங்கள் ஊழியர்களின் மன ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற வகையில் இடம்பெறும். மேலும், அவர்களின் எதிர்கால இலக்குகளை நோக்கி நடவடிக்கை எடுப்பதற்கான வலுவான எதிர்பார்ப்பைச் சேர்ப்பதன் மூலம் அவர்களின் கல்வி சாதனைகளில் உதவிக்கரம் வழங்குவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT