Tuesday, April 30, 2024
Home » NEPvQAT: ஒரு ஓவரில் 6 x 6 ஓட்டங்கள்

NEPvQAT: ஒரு ஓவரில் 6 x 6 ஓட்டங்கள்

- நேபாளம் சார்பில் டிபேந்திர சிங் சாதனை

by Rizwan Segu Mohideen
April 14, 2024 4:02 pm 0 comment

நேபாள அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வீரர் ஒருவர் ஓவரொன்றின் 6 பந்துகளிலும் 6 பெளண்டரிகளை அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் சபையினல் முன்னெடுக்கப்படும் ஆடவர் பிரிமீயர் கிண்ண (ACC Men’s Premier Cup) ரி20 கிரிக்கெட் தொடரிலேயே இந்த சாதனை பதிவாகியுள்ளது.

ஓமான் நாட்டில் இடம்பெற்று வரும் குறித்த தொடரில், நேற்றையதினம் (13) அல் அமரத்தில் (Al Amarat) நேபாளம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற 7ஆவது லீக் போட்டியில், நேபாள அணியைச் சேர்ந்த திபேந்திர சிங் அய்ரீ, கட்டார் வேகப்பந்து வீச்சாளர் கம்ரான் கான் வீசிய கடைசி ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்சர்களை அடித்து 36 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார்.

அந்த வகையில், திபேந்திர சிங் சர்வதேச ரி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த 3ஆவது வீரர் எனும் சாதனையை தனதாக்கியுள்ளார்.

கடந்த வருடம் மங்கோலியாவுக்கு எதிரான ரி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைச்சதம் அடித்து சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர், யுவராஜ் சிங் (2007), மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கைரன் பொல்லார்ட் (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நேபாள அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.

இப்போட்டியில் திபேந்திர சிங் 21 பந்துகளில் 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கட்டார் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

Nepal  (20 ovs maximum)
BATTING R B 4s 6s SR
c Kamran Khan b Amir Farooq 12 11 2 0 109.09
c Muhammad Tanveer b Rathod 52 41 6 0 126.82
c Muhammad Tanveer b Rathod 18 17 3 0 105.88
c Mohammed Irshad b Musawar Shah 35 18 2 3 194.44
not out 64 21 3 7 304.76
c Mohammed Irshad b Musawar Shah 7 6 0 0 116.66
b Rathod 5 4 1 0 125.00
lbw b Musawar Shah 5 4 0 0 125.00
not out 0 0 0 0
Extras (lb 1, nb 2, w 9) 12
TOTAL 20 Ov (RR: 10.50) 210/7

Did not bat: 

Fall of wickets: 1-18 (Kushal Bhurtel, 2.5 ov), 2-67 (Rohit Paudel, 7.5 ov), 3-120 (Kushal Malla, 13.5 ov), 4-127 (Aasif Sheikh, 14.2 ov), 5-136 (Sundeep Jora, 15.4 ov), 6-149 (Gulsan Jha, 16.6 ov), 7-174 (Bibek Yadav, 18.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
2.2 0 14 1 6.00 8 2 0 1 0
3 0 33 0 11.00 7 6 0 1 2
2 0 24 0 12.00 3 3 1 1 0
3 0 27 0 9.00 6 2 1 0 0
4 0 26 3 6.50 7 1 0 0 0
4 0 43 3 10.75 8 3 2 1 0
1.4 0 42 0 25.20 0 0 6 1 0
Qatar  (T: 211 runs from 20 ovs)
BATTING R B 4s 6s SR
b Gulsan Jha 18 13 1 1 138.46
c Yadav b Rajbanshi 1 3 0 0 33.33
c Paudel b Airee 23 18 4 0 127.77
c Bhurtel b Bohara 63 33 6 4 190.90
b Gulsan Jha 2 4 0 0 50.00
b Rajbanshi 5 6 0 0 83.33
st †Aasif Sheikh b Kushal Malla 8 12 0 0 66.66
not out 22 18 2 0 122.22
lbw b Airee 19 8 4 0 237.50
run out (Bhurtel/Airee) 7 5 1 0 140.00
not out 0 0 0 0
Extras (lb 1, w 9) 10
TOTAL 20 Ov (RR: 8.90) 178/9
Fall of wickets: 1-5 (Saqlain Arshad, 1.1 ov), 2-41 (Mohammad Ahnaff, 4.6 ov), 3-62 (Kamran Khan, 6.6 ov), 4-76 (Mohammed Irshad, 8.5 ov), 5-99 (Rifayi Theruvath, 11.1 ov), 6-126 (Muhammad Tanveer, 14.1 ov), 7-132 (Amir Farooq, 15.3 ov), 8-159 (Adnan Mirza, 17.3 ov), 9-173 (Ikramullah Khan, 19.4 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
2 0 28 0 14.00 3 4 1 1 0
4 0 23 2 5.75 9 2 0 1 0
4 0 34 2 8.50 11 5 1 1 0
2 0 24 2 12.00 3 1 2 2 0
4 0 29 1 7.25 6 3 0 2 0
4 0 39 1 9.75 2 3 1 2 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT